வயங்கொடை எலுவாபிட்டிய பிரதேசத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மருமகள் தனது மாமியாரை துடைப்பம் கட்டை உடையும்வரை வரை அடித்து பலத்த காயப்படுத்தியுள்ளார்.
தாக்குதலால் மாமியாரின் வலது கையின் எலும்புகள் பலமாக உடைந்துள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வீட்டின் சமையலறையில் இருந்த துடைப்பம் கட்டை பல துண்டுகளாக உடைந்துள்ளநிலையில் மீட்கப்பட்டதாகவும் வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணின் மகன் ஜப்பானில் பணிபுரிந்து வருவதாகவும், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் அவருடைய தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.