-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று ஞாயிற்று கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி எரிந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.




