கொழும்பு தலங்கம பகுதியில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலங்கம பகுதியில் அமைந்துள்ள வெளி நாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த வெளிநாட்டு பிரஜை உயிரிழந்துள்ளார்.
தீயை அணைக்க கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.