யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் கெற்பேலி – கச்சாய் வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உசன் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.