யாழ்ப்பாண பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகள் நேற்று புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவிய இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.