-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இதே பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சுப்ரமணியம் (வயது- 49 ) என பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கடலூர் கடற்கரையில் வழமை போன்று இன்றைய தினம் நீராடச் சென்றுள்ளார் கடலில் இவர் நீந்தி கொண்டிருப்பதை மக்கள் அவதானித்துள்ள நிலையில் நீண்ட நேரங்கள் சென்றும் மேலே எழும்பாமையால் மற்றுமொருவர் குறித்த நபரை கரைக்கு இழுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக, தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக , திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.