திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 22 பெண்களிடம் ரூ.4.5 கோடியை மோசடி செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த போலி வைத்தியரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 35 வயதான தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர், வைத்தியர் திலீப் குமார் என்பவர் குறித்து பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். திலீப் குமாரை, திருமணப் பதிவு இணையதளம் மூலம் சந்தித்ததாகவும் அவர் திடீரென மாயமாகிவிட்டதாவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறு அந்த பெண் வைத்தியர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், திலீப் குமார் தன்னை ஏமாற்றி ரூ.18 லட்சத்தை திருடிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த புகாரின் அடிப்படையில் பொலிஸாரின் விசாரணையில் அவர் வைத்தியரே இல்லை என்றும், இங்கிலாந்தில் வசித்து வரும் அவர், இதய நோய் வைத்தியர் என்று தன்னைக் கூறி கொண்டு இதுவரை 22 பெண்களை ஏமாற்றி அந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடமிருந்து இதுவரை அவர் ரூ.4.5 கோடியை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.