அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனத்தை பரிசோதிப்பதாக கூறி இளைஞனை கடத்தி சென்றுள்ளனர்.
6 மணித்தியாலங்கள் அந்த இளைஞனை தடுத்து வைத்து தாக்கியதுடன், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண், இராணுவ சிப்பாயின் 50 வயதுடைய தாய் எனவும் இராணுவ சிப்பாயும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.