கம்பஹாவில் திருடிய நகையை நபர் ஒருவர் விழுங்கியுள்ளார்.
கம்பஹா, ஒருத்தோட்டை வீதியில் பயணித்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க நகையை அறுத்துச் சென்றுள்ளதுடன் அதன் போது மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில் நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுத்து சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.