திருடர்களை பிடிப்போம் என்று கூறியவர்கள் திருடர்களை காப்பாற்றினார்கள்
2015 ஆம் ஆண்டில்,நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் இருந்து திருடப்பட்ட வளங்களைக் தேடி நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாகவும்,திருடர்களை பிடிப்போம் என்று கூறிய தலைவர்கள் திருடர்களை காப்பாற்ற டீல் போட்டதால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், இவ்வாறு நிறுத்தப்படாதிருந்தால், திருடப்பட்ட வளங்களை நாடு பெற்று மனித வளத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து,அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி,மனித வளத்திற்காக முதலீடு செய்து ஸ்மார்ட் நாடு, ஸ்மார்ட் கல்வி,ஸ்மார்ட் மாணவர் தலைமுறையை உருவாக்கும் வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 57 அரச பாடசாலைகளுக்கு 541 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
