-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை ரொட்டரி கழகத்தினால் கழகத்தின் தலைவர் அஜந்திக்கா, செயற்திட்ட தலைவர் அபிநயா ரகுராம் ஆகியோரினால் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் திரு.கே.பிரபாகரன் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் அதிகாரி என். ரகுராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் தேவை என்ற தலைப்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த செய்தியின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
