-மூதூர் நிருபர்-
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை – கிண்ணியா அல் அக்சா கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டி கிண்ணியா சூரங்கள் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் முஹம்மத் முலபர் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. இதில் உதவி கல்வி பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
6 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஆரம்பமாகிய இவ் ஓட்டத்தில் 90 மாணவர்கள் கலந்து கொண்டு கிண்ணியா அல்அக்சா கல்லூரியை வந்தடைந்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதனோட்டப் போட்டியில் வெற்றியீட்டிய முதலாம் மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுகளும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மாணவர்களுக்கு தலா 20 ,15 ,10 ஆயிரம் ரூபாய் பரிசுகள் நான்கு பேருக்கு வழங்கப்பட்டன.
வெற்றியீட்டிய நபர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. பழைய மாணவரான குளோபல் இஹ்சான் அமைப்பின் பணிப்பாளர் முகமது ஜரூக் இதற்கான பரிசுகளுக்கு அனுசரணை வழங்கினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்