திருகோணமலை – குச்சவெளி பிச்சமல் விகாரைக்கு அண்மித்த கடலில் டைனமைட் பாவனையால் அதிகளவான மீன்கள் இறந்து கரையோரத்தில் ஒதுங்கி காணப்படுவதாக பிச்சமல் விஹாராதிகாரி தெரிவித்துள்ளார்.
பிச்சமல் விகாரைக்கு அண்மித்த கடலில் நேற்று சனிக்கிழமை மாலை பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இதன்போது இறந்த மீன்கள் கடற்கரையில் பெருமளவில் குவிந்து வருவதாகவும், இதனால் கரையோரப் பகுதி மிகவும் மாசடைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.