திருகோணமலைக்கு விஜயம் செய்த இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் இன்று வியாழக்கிழமை நிர்மலா சீதாராமன் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரத்திற்கு வருகைதந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே, கல்வி அமைச்சின் செயலாளர் திஸநாயக்கா, கலாச்சாரப்பணிப்பாளர் நவநீதன் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய அறங்காவலர் சபையினர் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை பிரதான வீதியில் நிர்மானிக்கப்பட்டிருக்கும் இந்திய SBI வங்கியை இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தனர்.





