-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த PT-06 ரக விமானம் ஒன்று பயிற்சியின் போது ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஹெராட் ((02712 W/C HMTK), வர்ணசூரியா (12271 F/O KMPM) ஆகிய இரு விமானிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

