இந்தியா – டெல்லியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (National Capital Region – NCR) இன்று திங்கட்கிழமை மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இன்று மதியம் சரியாக 2.51மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் நேபாளத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் பூமியின் நிலப்பரப்பில் இருந்து 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் சில கட்டிடங்கள் குலுங்கியதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் அச்சத்துடன் தகவல்கள் பரிமாறி வருகின்றனர். மேலும் இந்த நில அதிர்வால் டெல்லி மக்கள் பீதியடைந்துள்ளனர். டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்