யாழில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை மயங்கி விழுந்த கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது – 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டதாக கூறப்படுகின்றது.