கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தும்புத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் தீ பரவியதால் 50இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்துள்ளன.
குறித்த தும்புத்தொழிற்சாலையில் நேற்று புதன் கிழமை தொழில் நடவடிக்கைகள் நடைபெறவில்லை எனவும் தொழிற்சாலையில் யாரும் இல்லாத வேளையிலேயே இவ்வாறு தீ பிடித்துள்ளதுடன் அப்பகுதி மக்கள் கிளிநொச்சி தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

