கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் செவ்வாய் கிழமை ஒருவரது கிணறு தாழிறங்கியுள்ளது.
மேலும் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது.
கிணற்றின் சூழ உள்ள பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன் இது தொடர்பாக அதிகாரிகள் தமக்கேதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.