வடமராட்சி வேம்படிப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தாயார் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தாயார் மறைத்து வைத்த பொருளை எடுத்து விற்பனை செயத்தான் என சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.