இலங்கை அரசாங்கம், அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும் என நேற்று வியாழக்கிழமை தமது புதிய ஆய்வு தொடர்பில், வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளதாகவும் தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளன.
மேலும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.