கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தாயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தாயொருவர் தனது மகன் தன்னையும், குடியிருப்பாளர்களையும் தாக்குவதாக கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் 4 உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது மறைந்திருந்த மகன் முச்சக்கரவண்டியின் முன்பக்க கண்ணாடியை தடிகளால் தாக்கிவிட்டு பயந்து ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்