மாலம்பே, கஹந்தோட்ட வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவரின் சடலங்கள் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தின் தந்தை கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மரணங்கள் தற்கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் சடலங்கள் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.