கம்பஹா திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக 3 பிள்ளைகளின் தாய் நேற்று திங்கட்கிழமை மாலை அவரின் மூத்த மகனால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.