இந்தியாவில் காதலன் தனது காதலியின் தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததன் காரணத்தால் சிறுமியை தாயின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கல்யாண் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா காம்ப்ளே (வயது – 20) டீஸ்கான் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் சிறுமியை திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் தாயார் இளைஞருடன் வாக்குவாதம் செய்து முடிவில், தனது பெண்ணை திருமணம் முடித்து தர முடியாது என்று கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், தாயின் கண் முன்னரே அடுத்தடுத்து 10க்கும் அதிகமான முறை சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
கொலை செய்த பின்னர் இளைஞர் காம்ப்ளே ஃபினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரை பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காம்ப்ளே மீது கொல்சேவடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 கொலை செய்தல், 309 தற்கொலைக்கு முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.