மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பதாகைகளை அகற்றியமை தொடர்பில், பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் மூவரும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, மூவரையும் தலா 25000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.