தவறான விமானத்தில் ஏறிய 6 வயது சிறுவன்

புளோரிடாவில் தனது பாட்டியை சந்திக்க விமானத்தில் சென்ற 6 வயது சிறுவன் ஸ்பிரிட் எயார்லைன் குழுவினரால் தவறான விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானம் பிலதெல்பியாவில் இருந்து புளோரிடாவில் தரையிறங்கிய பின் குறித்த சிறுவனின் பாட்டி தனது பேரனை பார்க்க ஆசையோடு சென்றிருக்கிருக்கிறார் எனினும் பேரன் விமானத்தில் இருந்து வரவில்லை.

இது குறித்து சிறுவனின் பாட்டி தெரிவிக்கையில்,

விமானப் பணிப்பெண்ணிடம் ஓடினேன்,  ‘என் பேரன் எங்கே? அவர் பிலதெல்பியாவில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்?’ என்று கேட்டேன், அதற்கு அந்த விமான பணிப்பெண்   “இல்லை என்னிடம் அப்படி ஒரு குழந்தையும் ஒப்படைக்கப்படவில்லை”  என்று தெரிவித்தாள் என தெரிவித்தார்.

அதன் பிறகு விமான நிலையத்திலும் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோரிடமும் விசாரித்ததில் பாட்டியை சந்திக்க விடானத்தில் ஏற்றி அனுப்பபட்ட சிறுவன் தவறுதலான மற்றொரு விமானத்தில் ஏற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

தவறுக்கு மன்னிப்புக் கேட்ட விமான நிறுவனம்இ ‘சிறுவன் ஸ்பிரிட் எயார்லைன் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக பயணித்தான் எனினும் விமானம் மாற்றி சிறுவன் ஏற்றப்பட்டுள்ளான். இந்த விடயம் தெரிந்த உடனேயே நாங்கள் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு சிறுவனை விரைவாக அவனது பாட்டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் சிறுவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டோம் என தெரிவித்துள்ளது.

மேலும்இ பயணத்தில் செலவான பணத்தை திருப்பி செலுத்தவும் விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது

கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுவன் பிலதெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புளோரிடா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்க இருந்த நிலையில் தவறுதலாக ஆர்லாண்டோ செல்லும் விமானத்தில் சிறுவன் ஏறியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.