-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.
வெற்றிலைக்கேணியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்தியதால் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.