-யாழ் நிருபர்-
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கந்தசாமி தர்ஷன் (வயது 31) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.