நோட்டன்பிரிஜ் ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகர் இன்று செவ்வாய்கிழமை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் (வயது – 16) என்ற இளம் பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதான பூசகர் கோவிலில் இல்லாத சமயத்திலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்றும் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்தில் அவரது சடலம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள நோட்டன்பிரிஜ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.