தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 320 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.