ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இப்பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.