கையடக்கத் தொலைபேசி மூலம் 05 பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டிய நபர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறித்த நபர் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த பாடசாலையின் அதிபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் லுனுவில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது வகுப்பறையில் ஆசிரியர் எவரும் இல்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.