தரம் – 10 இல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணை விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, நான்கு வயதைப் பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்வது தொடர்பான விடயமும் இப்பிரேரணையில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தம்
பாடசாலை மாணவர்களின் பரீட்சை சுமையைக் குறைக்கும் வகையிலும் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும் 2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களானது, 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என்றும், க.பொ.த உயர்தர பாடங்கள் 5 இல் இருந்து 8 அல்லது 9 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
தற்போது அரசினால் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பரீட்சை முறைமையில் மேலும் பல விரிவான மாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பாடசாலைகளால் நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் புள்ளி வழங்கல் முறை பின்பற்றப்படும் எனவும், அதேவேளை 520 பாடசாலை வளாகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
தற்போது அமுலில் உள்ள 01 – 13 தரங்கள், 01 – 12 ஆகக் குறைக்கப்படுவதுடன், பாடசாலைக் கல்வி 12 ஆம் வகுப்புடன் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளா