தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீண்டும் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான ஆய்வுகூடத்தை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதுடன் சந்தேகநபரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று முன் தினம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.