இந்தியாவின் தமிழகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2024ஆம் ஆண்டு 6.09 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் தேசிய அளவில் குழந்தை பிறப்பு வீதம் 1.90% ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் 1.40 % ஆக காணப்படுகின்றது.
மேலும் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாகவே பிறப்பு வீதம் குறைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.