தபால் கட்டணத்தை அடுத்த வருடத்தில் திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் இவ்வாறு விலைத்திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது