இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு எதிராக நியாயமற்ற வகையில் வழக்கை தொடுத்து, அவருக்கு பொலிஸார் வீண் செலவினத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க கடந்த செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கில் ஏற்பட்ட செலவினம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை, அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றில் இன்று இடம்பெற்ற போதே, இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு முன்னர், சாட்சியங்களின் அனைத்து உண்மைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி , அவ்வாறில்லை எனில், நியாயமானதாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில், காணப்பட்ட சில உள்ளார்ந்த சிக்கல்களை வழக்கு தொடுப்பதற்கு முன்னர் பொலிஸார் அறிந்திருக்க வேண்டும்.
குறித்த விடயத்தில், தனுஷ்க குணத்திலக்கவுக்கு ஏற்பட்டுள்ள வீண் செலவினத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதுடன், அதற்கான தொகை அவருக்கு மீள செலுத்தப்படும் எனவும் சிட்னி நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.