தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய அறைகளில் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய நேற்று ஞாயிற்று கிழமை சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாடசாலைகளுக்கு செல்லும் வயதை ஒத்தவர்கள் தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறைகளில், பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சிறிய அறைகளில் 24 ஜோடிகளை இருந்ததாகவும் இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுத்து, அந்த ஜோடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.