யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் தனிமையில் வசித்துவரும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்குச் சென்ற சில சந்தேக நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.