-யாழ் நிருபர்-
யாழில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் சுதாந்தன் (வயது – 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் காசு கேட்டுள்ளார். தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றையதினம் நேற்று முன் தினம் குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் நேற்று சனிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.