தலவாக்கலை பிரதேசத்தில் தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா (வயது – 15) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.