பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை 4 ஆவது திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானதுடன் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
இது குறித்து இணையத்தள பயனாளிகள் பலரும் பல விதத்தில் கருத்து தெரிவித்த நிலையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி குறித்த பெண் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை எப்போதும் நான்காவதாகப் பிறக்கும் பெண்ணுக்கு ராபியா எனப் பெயர் வைப்பார்களாம். ஆனால், இந்த பெண் அவர்களின் இரண்டாவது மகள் என்றும் எனினும் இரண்டாவதாக பிறந்த மகளுக்கு நான்காவதாகப் பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் ராபியா என்ற பெயரை வைத்துள்ளார்கள் இவரது பெற்றோர். இதன் காரணமாகவே அந்த பெண் தனது தந்தையை திருமணம் செய்ததாக தகவல் பரவியது.
அந்தப்பெண் கூறும் போது “நான் எனது தந்தையை எல்லாம் மணக்கவில்லை. நான் குடும்பத்தில் இரண்டாவது குழந்தை. ஆனால், எனக்கு ராபியா எனப் பெயர் வைத்தார்கள். பாகிஸ்தானில் எப்போதும் 4ஆவதாக பிறக்கும் குழந்தைக்கே ராபியா எனப் பெயர் வைப்பார்கள். அப்படியிருக்கும் போது எனக்கு அவர்கள் ஏன் ராபியா எனப் பெயர் வைத்தார்கள் எனப் புரியவில்லை. இது குறித்து நான் அவர்களிடம் கேட்ட போதும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த நான், வேறு ஒருவருக்கு 4ஆவது மனைவியாகச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே நான் இவருக்கு 4ஆவது மனைவியாக வந்துள்ளேன். எனது தந்தையை திருமணம் செய்தாக கூறுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்றார்.
இருப்பினும் அந்த பெண் விளக்கம் அளித்த பிறகும், மொழி புரியாததால் பலரும் அவர் தனது தந்தையையே திருமணம் செய்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.