குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியபலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடிக்கும் போது தந்தை ஆற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கியதாகவும் அவரை காப்பாற்ற ஆற்றில் குதித்த மகனும் நீரில் மூழ்கிய நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.