காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று புதன் கிழமை தந்தையின் வாகனத்தை மகன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வர்த்தகரான தந்தை தனது வாகனத்தில் நேற்றுக் காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் தனது மீன்பிடிப் படகை பரிசோதிப்பதற்காக வாகனத்தில் சென்றபோது பேருவளையிலிருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் எதிரில் தான் வந்த வாகனத்தினால் தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இருவரது வாகனங்களும் பேருவளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.