புலத்சிங்கள பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ரந்திக பியூமல் கமகே (வயது – 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக புலத்சிங்களவில் இருந்து ஹொரணை நோக்கி தனது நண்பருடன் பயணித்துள்ளார்.
இதன் போது நரகல பகுதியில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.