மஸ்கெலியா பகுதியில் யுவதி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு கடந்த 10 ஆம் திகதி காலை பணிக்கு செல்ல போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் வசித்து வரும் வெள்ளசாமியின் மகள் ஹரனி (வயது – 22) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது குறித்து அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை 11 ஆம் திகதி பதிவு செய்து உள்ளார்.
இவரை காண்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கோ அவரது தந்தைக்கோ அறிய தரவும். (0702180069, 0522277222)