குருநாகல் நாரம்மலை பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நாரம்மலை பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த பண்டார (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லசந்த பண்டாரவின் தந்தை மீது தாக்குதல் நடத்த வாள்களுடன் ஒரு குழுவினர் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளனர்.அதன்போது தந்தை, வீட்டின் பின்வாசலால் தப்பியோடிய நிலையில் மகன் மீது குறித்த வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய லசந்த பண்டார உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கொலையாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.










