தட்டம்மை ஒரு கொடிய நோயாகும்இ ஆனால் பொருத்தமான தடுப்பூசி செயல்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் அதை எளிதாகத் தடுக்கலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது 10 மாவட்டங்களில் தட்டம்மை நோயின் அபாயம் காணப்படுவதாக வைர்ரியர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவாச மண்டலத்தின் மூலம் இந்த வைரஸ் உட்செல்வதன் மூலம், ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.
இந்த வைரஸ் ஆரோக்கியமான நபரின் உடலில் நுழைந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக காய்ச்சல், இருமல், தடிமன் மற்றும் கண் சிவத்தல் ஆகியவை அம்மை அறிகுறிகளாக அடையாளம் காணப்படலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 15 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் 7 பேர் தட்டம்மை நோயாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப தடுப்பூசி திட்டங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.