ஒரு கோடி 15 இலட்ச ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயதானவரே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில், துபாயிலிருந்து அவர் இலங்கைக்கு தங்கம் கடத்தியமை, விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.